Saturday, November 12, 2011

நானும் வருவேன் கனவில்
காதல் கொண்டு அல்ல
கவிதை கொண்டு
நண்பன் கனவை கண்டு

அது

அறியாத முகம் அது .
புரியாத உணர்ச்சி அது
தெரியாத உருவம் அது
தெளியாத குழப்பம் அது
மறையாத நினைவு அது
ஓயாத நிலை அது .....
அது ......................

யார் நீ ?

பேரழகின் பேரழகே அந்த மங்கை முகம் தானோ ?
என்னவென்று சொல்வதம்மா அவளின் பேரழகை
அழகான நெற்றி
வில் போன்ற புருவம்
அம்பு எறியும் விழிகள்
பளிங்கி போல் மூக்கு
மொத்தத்தில் அவள் முகத்தில்
அதிகமாய் இருப்பது
"அழகு" மட்டும் தான்..
ஒரு முறை தான் பார்த்தேன் ..
ஒவ்வொரு நொடியும் உன்முகத்தை தான் நினைக்கிறேன்..

அழகின் அழகே அவள் முகம் தான்

வைர மூக்குத்தி போடாமலே உன் மூக்கில் பட்ட சூரிய ஒளி மின்னியதே அது எதனாலோ ?

மறக்க முடியாத விழிகள் ..
மறுக்க முடியாத பார்வை ...
அவளுடையது தான் .....

Google ளிடம் சென்று கேட்டேன் அவள் யார் என்று அவளின் பேரழகில் மயங்கி இதுவரை பதில் சொல்லவில்லை ...

மறுமுறை பார்க்க
ஒருமுறை பேச
வாய்ப்பு கிடைத்தால்
சத்தியமாய் உலரதான் செய்வேன்
அவள் முன்னாள் ...

அதை மறந்துவிட்டேன்
இதை மறந்துவிட்டேன்
என்று ஆயிரம் புகார்கள்..
நான் தான் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறேனே....

ஏன் என் இடத்தில் உங்கள் பெயர்பலகை உள்ளது ..
உங்கள் இடம் அது ...
அவளின் நினைப்பால் ஏற்பட்ட நில அபகரிப்பு ..
நல்லவேளை நான் ..........அல்ல

ஒரு மணிநேர மவுனம் .அவள் முகத்தை மட்டுமே பார்த்த வண்ணம் ..முதல் முறையாய் நண்பா

இன்றும் என்றும் உனக்காக ....

யார் நீ ?
என்று வருவாய் .....
வருவாயா ....
வாழ்க்கை முழுக்க ..

கதிரவனை காணவில்லை

இன்று காலை கதிரவனை காணவில்லை
என்று
நிலாவை அழைக்க நட்சத்திரத்திடம் நம்பர் கேட்டேன் ...

" லூசாய நீ "

பொறுமையாய் இருப்பவனெல்லாம் கோழையுமல்ல ..
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "
பாரதிக்கு கவிதை வந்தால் சிறப்பு ...
ஆனால்பாரதியே கவிதையாய் வந்தால் (ள்) ......

மௌனம்....

இதோ கவிதை ..
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...

கவிதை

வரி வரியாய் கவிதை சொல்வேன் .
முதல் வரி
இரண்டாம் வரி
மூன்றாம் வரி என
வரி வரியாய் கவிதை சொல்வேன் .

காதல்

நண்பர்களால் காதல் கருவாக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது ..அனால் காதலோ நண்பர்களின் கருவறுத்து நட்பை கல்லறைக்கு அனுப்புகிறது....

உப்புநீராய் குருதி

உழைப்பவனின் குருதி உப்புநீராய் வழிந்தோடி .வார்த்தெடுத்த வெள்ளிப்பணம் அவன் ..வயேற்றுக்கும், வட்டிக்கும், வாரிசுக்கும் ஏன் வாழ்க்கைக்கும் கூட வகை செய்யாமல் வறுமைக்கு வாக்கப்பட வைத்தது அவன் அருமை மகளை.வெட்டியான் வெட்டிவைத்த குழிக்கு கட்டிட காசில்லாமல் கதறி அழுதது அந்த பெண்ணின் மனம்.