Tuesday, January 18, 2011

" வெற்றி "

தாய் கொடுத்தது " உயிர் " எழுத்து
தந்தை கொடுத்தது " முதல் " எழுத்து
ஆசிரியர் கொடுத்தது " வடிவ " எழுத்து
கடவுள் கொடுத்தது " தலை " எழுத்து
தமிழ் கொடுத்தது " ஆயுத " எழுத்து
நாமே கொடுத்தது " கை " எழுத்து
படிப்பு கொடுத்தது " பட்ட " எழுத்து
பதவி கொடுத்தது " பொறுப்பு " எழுத்து
ஆஅ என்பது " முதல் " எழுத்து
ழ என்பது "சிறப்பு " எழுத்து
என்றும் நம் வெற்றி காண்பது " மெய் "எழுத்து

விபத்து

வினாடி இன் விலை ....
விதி இன் விளைவு
விழிப்பின் அவசியம்
வேகத்தின் வெற்றி
விவேகத்தின் தோல்வி
விரும்பாத விளையாட்டு
வருத்தத்தின் வாசல்
வழக்கமான வழிப்போக்கன் ..........

Wednesday, January 12, 2011

பொங்கலோ ...... பொங்கல் ......

காலையில கதிரவன் கை நீட்டி எழுப்பி விட
கருக்கிய ரோட்டி துண்டு வெண்ணை சேர்த்து தின்று விட்டு
கால தாமதமாக அலுவலகம் பொய் விட்டு
பறந்தோடி வந்து நிலவத்தேடி சூரியன் வரும் வேலைஇல வீடு வந்த
பொங்கலோ பொங்கல் .... பொங்கலோ பொங்கல் ன்று பெருங்கூச்சல்
படுத்தத்தெழுந்து பத்தர மணிக்கு இரண்டு இடலி கொஞ்சம் பொங்கல்
சிறுத்த வயறு கொள்ளள , மத்தவங்க சிறப்பு நிகழ்ச்சி இல சிதைந்து போக
நான் மட்டும் மடிகணினி இல நண்பர்களுடன் அரட்டை ,
மச்சான் ன்னு சத்தம் கேட்க பள்ளி தோழன் மாரிமுத்து
நல்ல நலம் தான் ஆனா இருந்த மூணு பாகம் நெலத்தையும் வித்து தம்பிய படிக்க வச்சிட்டன் இப்போ பஞ்சாலைக்கு போறான்
என்ன மாதிரி என் தம்பியும் பன்னண்டவதுல நம்ம ஊருல முதலிடம் , அதே மாதிரி இப்ப உம் முதலிடம் தான் பெங்களூர் வேலையாம் பரிச்ச முடிச்சதும்
வரச்சொல்லிருக்காங்க ஒன்குட தங்க வைக்கிறதுக்கு கேக்க சொன்னான்
அதான் பொங்கலுக்கு வரும்போது ஒரு வர்த்த சொல்லி வைக்கலாம்னு வந்தேன் விளையாட்டு போட்டி பாக்க வா .. வீட்டு திண்ணை இல பாஏய் போட்டு
வைச்சிருக்கேன் தம்பிக்கு ஒங்க அப்பதான் பரிசு கொடுக்க போறார் ஆறு வருசமா
அவன்தான் நம்ம ஊருல முதலிடம் வர்றான்
அக்கா புள்ளைகள குப்பிட்டு கொண்டு வா சாயங்காலம் கலை நிகழ்ச்சி உண்டு .....

Saturday, January 8, 2011

தாய்மை

எங்கு பிறப்போம்
எங்கு இருப்போம்
எங்கு இறப்போம்
என்று தெரியாது
என்னே விந்தை
இந்த விந்தைஇல்
உண்மை ஒன்றே
அது
" தாய்மை "