Friday, May 4, 2012

இந்தியா

v dir="ltr" style="text-align: left;" trbidi="on"> iv> ..............................​..இந்தியா.....................​.... இருபதாயிரம் ஆண்டுகால பழம்பெரும் நாகரீகம் கொண்ட இனக்குழுக்களை இதிகாச காம கதை சொல்லி வருணாசிரம வரிசைப்படி வாட வைத்து வந்தேறிகளுக்கு வால் பிடித்து, வழமையாய் வாழ்ந்தவனை வகுப்புவாத பிரிவை சொல்லி வாசலுக்கு வெளியே நிறுத்தி வாழ்வை அழித்த வஞ்சக நெஞ்சம் கொண்ட பாதக பார்ப்பனியர் ஆளும் நாடு .................இந்தியா ..................

மே தின வாழ்த்துகள் ...

உழைப்பில்லாமல் உலகத்தை பார்த்தால் உலகத்தில் ஒன்றுமே இல்லை உழைப்பவனுக்கு உரிமையில்லை ஊழலுக்காக தரப்படும் இலவசத்தின் உழைப்பு தன்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட குருதியை குடித்து உழைக்காமல் கொளுத்து கிடக்கும் முதலைகளின் எச்சம் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடி பொதுவுடைமை சமுதாயம் உருவாக உழைக்கும் அணைத்து உழைக்கும் மக்களுக்கும் மே தின வாழ்த்துகள் ...

நட்பு

ஒரு வரி கவிதை - இவன் என் நண்பன் ஒரு சொல் கவிதை - நட்பு ஒரு எழுத்து கவிதை - நீ . இன்னும் என்ன சொல்ல இறுதிவரை இருப்பது நட்பு இறந்தபின் இருப்பதும் நட்பு

வான் மகள்

அழகான மாலை நேரம் அருமையான தென்றல் காற்று அனாதையாய் அமர்ந்திருந்தேன் அன்னைபோல் அரவணைக்க வந்தாள் இருவரும் பார்த்தோம் இன்பமான நேரம் ஒரு முத்தம் கேட்டேன் மறுத்தாள் உறங்க மடி கேட்டேன் மறுத்தாள் சிறு புன்னகை கேட்டேன் மறுத்தாள் இருவரும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம் திட்டவாவது செய் என்றேன் மறுத்தாள் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தோம் காலை விடிந்ததும் கதிரவன் வந்ததும் தாவிக் குதித்து ஓடி மறைந்தாள் என்னை மட்டும் தனிமைபடுத்திவிட்டு ... மானுடத்தின் காதலன்