Friday, May 4, 2012

நட்பு

ஒரு வரி கவிதை - இவன் என் நண்பன் ஒரு சொல் கவிதை - நட்பு ஒரு எழுத்து கவிதை - நீ . இன்னும் என்ன சொல்ல இறுதிவரை இருப்பது நட்பு இறந்தபின் இருப்பதும் நட்பு

வான் மகள்

அழகான மாலை நேரம் அருமையான தென்றல் காற்று அனாதையாய் அமர்ந்திருந்தேன் அன்னைபோல் அரவணைக்க வந்தாள் இருவரும் பார்த்தோம் இன்பமான நேரம் ஒரு முத்தம் கேட்டேன் மறுத்தாள் உறங்க மடி கேட்டேன் மறுத்தாள் சிறு புன்னகை கேட்டேன் மறுத்தாள் இருவரும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம் திட்டவாவது செய் என்றேன் மறுத்தாள் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தோம் காலை விடிந்ததும் கதிரவன் வந்ததும் தாவிக் குதித்து ஓடி மறைந்தாள் என்னை மட்டும் தனிமைபடுத்திவிட்டு ... மானுடத்தின் காதலன்

Tuesday, March 20, 2012

அழிவின் விளிம்பில் மக்கள் ஆயுதமாய் அணு உலை ...

உலக நாடுகளின் வரலாற்றின் அடிப்படை இல் பாத்தால் , இரு நாடுகளுக்கு இடையே சண்டை என்று வரும் பொது முதலில் குண்டு போடப்படுவது அணு உலை மீது தான். இவ்வாறு இருக்கயில் நமக்கோ நாலா புறமும் பகை வளர்த்து உள்ளது இந்தியா 1 . பாக்கிஸ்தான் உடன் பிறந்த சகோதரனை மதத்தின் பெயரால் மகாத்மாவின் சாதனையால் தீரா பகை வனாக்கிவிட்டோம். 2 . வங்கதேசம் , அதன் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்று எண்ணி பாக்கிஸ்தான் இடமிருந்து பெரிதும் , அதில் பாதி மக்கள் எதிரிகலானர்கள் , இந்திய உள்நாட்டு பகை வளர்த்து தனக்கு ஆதரவானவனை ஆட்சியில் வைத்தது அதனால் அங்கும் பகை . 3 . சீனா சொல்லவே தேவை இல்லை அனைவரின் தலைவன் அவன்தான் . ஆசியாவின் அதிகாரம் யாருக்கு சீனா உக்க இல்லை இந்தியாக்கா என்பதை எந்த நேரத்திலும் நீறுபிக்க அனனைத்து வகை ஆயுதத்துடன் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான் . 4 . இலங்கை நமக்கு துணையாய் இருப்பான் என்று எண்ணி என் தமிழ் மக்களை கொன்று குவிக்க உறுதுணையாய் இருந்த்தாயாய். அமெரிக்க அதிக்ககம் பெரிதாகும் பொது அவன் சீனாவின் துணை கொண்டு உன்னை அடிப்பதில் சந்தேகமே இல்லை. ஏற்க்கனவே சீன கப்பல் படை இலங்கையில், சிலதினங்களுக்கு முன்னாள் கச்சத் தீவில் இரண்டு இலங்கை போர் கப்பல்கள் நிற்கும் அதை கடற்ப்படை தளமாகுவோம் என்று அறிவிதாகி விட்டது. நாலு புறமும் நன்பகை வளர்த்து நடுவினில் மக்களை வாழவைத்து கொன்று குவிக்க அணு உலை வைத்தாயே மதி கேட்ட மடையான் கூட செய்யாத செயலை மண்டைக்குள் களிமண் உருண்டை கொண்ட மன்மோகன் அரசு செய்ததுவே .. மக்களே பெராடினால் பொதுவில் நன்மை . பேசாமல் இருந்ததால் புதை குழியில் தனிமை .. மானுடத்தின் காதலன்

Monday, March 19, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஆடு மாடு மேய்த்துக் கொண்டு
ஆரிய கூத்தாடிக் கொண்டு
அடிமை போல வந்த இந்த ஆரியம்

கூடி வாழும் நம்மை கண்டு
கொடுத்துதவும் மனத்தை கண்டு
கொள்ளை கொள்ள வந்த இந்த ஆரியம்

வீரமிக்க மறவர் நம்மை
மாற்றானுக்கு காட்டி கொடுத்தும்
மங்கையரை ...ட்டி கொடுத்தும்
அரியணைக்கு வந்த இந்த ஆரியம்

நன் மக்கள் நம் மக்கள் மாண்டனரே
பகையுணர்வு பூண்டனரே பிளவு
சாதியத்தின் விதை தன்னை
சாமிஎன்று புகுத்திடவே வந்த இந்த ஆரியம்

எண்ணாயீரம் நூல்கள் கண்ட நாம்
ஈரெட்டு தலைமுறையாய் படிக்கலியே
பகுத்தறிவை புதைத்திட்டு பார்ப்பணனை
பார் ஆள வைத்திடவே வந்த இந்த ஆரியம்

வெள்ளையனை வெளியேற்ற வீறு கொண்ட கூட்டத்தை
வேரோடு அகற்றிவிட்டு ஆரியத்தின் தலையினிலே
அரியணையை ஏற்றிடவே வந்த இந்த ஆரியம்

அறுபது ஆண்டுகளாய் அங்கும் இங்கும்
கிளர்ந்தேளுந்தோம் அனாலும் அறியாமல்
அம்மாவின் ஆட்சியிலே மாட்டிக்கொண்டோம்
ஆரியத்தால் நம்கையை நாமே பூட்டிக்கொண்டோம்

குல்லா தலையனின் தலைமையிலே
குள்ளநரி கூட்டம் ஒன்னு திரியுது
அது கூடிக்கூடி போசி பல கொலைகள் புரியுது
கூடன்குலத்திலே அணு குண்டோன்னு வைச்சு
அள்ள அள்ள பணம் கண்ட
அன்னியர்க்கும் இந்திய அமைச்சருக்கும்
அழிவின் வழியாம் ஆறாத வடுவாம்
அணுஉலையை திறக்க ஆயுதம் ஏந்தி நிற்கிறது
அடிமைகள் நாம் என்று .....

" காஷ்மீரில் கண்ட இடத்தில் கொலை
ஒரிசாவில் ஓயாமல் கொலை
பழங்குடிமக்கள் தினம் கொலை
பரமக்குடில் படுகொலை
கூடங்குளத்தில் அணு உலை "

கொலைகார கூட்டத்தின் வேரறுப்போம்
மக்கள் புரட்சி தனை வென்றெடுப்போம் ..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒதுங்கி நின்றால் அணுஉலையால் சாவு ..


மானுடத்தின் காதலன் .

Saturday, November 12, 2011

நானும் வருவேன் கனவில்
காதல் கொண்டு அல்ல
கவிதை கொண்டு
நண்பன் கனவை கண்டு

அது

அறியாத முகம் அது .
புரியாத உணர்ச்சி அது
தெரியாத உருவம் அது
தெளியாத குழப்பம் அது
மறையாத நினைவு அது
ஓயாத நிலை அது .....
அது ......................

யார் நீ ?

பேரழகின் பேரழகே அந்த மங்கை முகம் தானோ ?
என்னவென்று சொல்வதம்மா அவளின் பேரழகை
அழகான நெற்றி
வில் போன்ற புருவம்
அம்பு எறியும் விழிகள்
பளிங்கி போல் மூக்கு
மொத்தத்தில் அவள் முகத்தில்
அதிகமாய் இருப்பது
"அழகு" மட்டும் தான்..
ஒரு முறை தான் பார்த்தேன் ..
ஒவ்வொரு நொடியும் உன்முகத்தை தான் நினைக்கிறேன்..

அழகின் அழகே அவள் முகம் தான்

வைர மூக்குத்தி போடாமலே உன் மூக்கில் பட்ட சூரிய ஒளி மின்னியதே அது எதனாலோ ?

மறக்க முடியாத விழிகள் ..
மறுக்க முடியாத பார்வை ...
அவளுடையது தான் .....

Google ளிடம் சென்று கேட்டேன் அவள் யார் என்று அவளின் பேரழகில் மயங்கி இதுவரை பதில் சொல்லவில்லை ...

மறுமுறை பார்க்க
ஒருமுறை பேச
வாய்ப்பு கிடைத்தால்
சத்தியமாய் உலரதான் செய்வேன்
அவள் முன்னாள் ...

அதை மறந்துவிட்டேன்
இதை மறந்துவிட்டேன்
என்று ஆயிரம் புகார்கள்..
நான் தான் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறேனே....

ஏன் என் இடத்தில் உங்கள் பெயர்பலகை உள்ளது ..
உங்கள் இடம் அது ...
அவளின் நினைப்பால் ஏற்பட்ட நில அபகரிப்பு ..
நல்லவேளை நான் ..........அல்ல

ஒரு மணிநேர மவுனம் .அவள் முகத்தை மட்டுமே பார்த்த வண்ணம் ..முதல் முறையாய் நண்பா

இன்றும் என்றும் உனக்காக ....

யார் நீ ?
என்று வருவாய் .....
வருவாயா ....
வாழ்க்கை முழுக்க ..