Monday, March 19, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஆடு மாடு மேய்த்துக் கொண்டு
ஆரிய கூத்தாடிக் கொண்டு
அடிமை போல வந்த இந்த ஆரியம்

கூடி வாழும் நம்மை கண்டு
கொடுத்துதவும் மனத்தை கண்டு
கொள்ளை கொள்ள வந்த இந்த ஆரியம்

வீரமிக்க மறவர் நம்மை
மாற்றானுக்கு காட்டி கொடுத்தும்
மங்கையரை ...ட்டி கொடுத்தும்
அரியணைக்கு வந்த இந்த ஆரியம்

நன் மக்கள் நம் மக்கள் மாண்டனரே
பகையுணர்வு பூண்டனரே பிளவு
சாதியத்தின் விதை தன்னை
சாமிஎன்று புகுத்திடவே வந்த இந்த ஆரியம்

எண்ணாயீரம் நூல்கள் கண்ட நாம்
ஈரெட்டு தலைமுறையாய் படிக்கலியே
பகுத்தறிவை புதைத்திட்டு பார்ப்பணனை
பார் ஆள வைத்திடவே வந்த இந்த ஆரியம்

வெள்ளையனை வெளியேற்ற வீறு கொண்ட கூட்டத்தை
வேரோடு அகற்றிவிட்டு ஆரியத்தின் தலையினிலே
அரியணையை ஏற்றிடவே வந்த இந்த ஆரியம்

அறுபது ஆண்டுகளாய் அங்கும் இங்கும்
கிளர்ந்தேளுந்தோம் அனாலும் அறியாமல்
அம்மாவின் ஆட்சியிலே மாட்டிக்கொண்டோம்
ஆரியத்தால் நம்கையை நாமே பூட்டிக்கொண்டோம்

குல்லா தலையனின் தலைமையிலே
குள்ளநரி கூட்டம் ஒன்னு திரியுது
அது கூடிக்கூடி போசி பல கொலைகள் புரியுது
கூடன்குலத்திலே அணு குண்டோன்னு வைச்சு
அள்ள அள்ள பணம் கண்ட
அன்னியர்க்கும் இந்திய அமைச்சருக்கும்
அழிவின் வழியாம் ஆறாத வடுவாம்
அணுஉலையை திறக்க ஆயுதம் ஏந்தி நிற்கிறது
அடிமைகள் நாம் என்று .....

" காஷ்மீரில் கண்ட இடத்தில் கொலை
ஒரிசாவில் ஓயாமல் கொலை
பழங்குடிமக்கள் தினம் கொலை
பரமக்குடில் படுகொலை
கூடங்குளத்தில் அணு உலை "

கொலைகார கூட்டத்தின் வேரறுப்போம்
மக்கள் புரட்சி தனை வென்றெடுப்போம் ..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒதுங்கி நின்றால் அணுஉலையால் சாவு ..


மானுடத்தின் காதலன் .

No comments:

Post a Comment