Wednesday, July 13, 2011

அறுசுவை உணவு ---?

காலைஇல காப்பி தொட்டு கண்முழித்து
ஐந்தர மணிக்கு எழுந்து அம்மா செய்த
அறுசுவை உணவை அரக்க பறக்க அள்ளி போட்டு
மதிய உணவுக்காக மட்டுமே பேக் எடுத்திட்டு
அவசரமா கல்லுரி வந்தா அப்பவும் கால் மணிநேரம் லேட்
மத்தியானம் பொரியலோட சாம்பார் சாதம்
உண்டு உறங்கி விழுந்து நாலரமனிக்கு
பெட்டிக்கடை வெளியே வெட்டி அரட்டை முடிந்து
அருமையான தோசை அஞ்சு தின்னு
அழகாக வாழ்ந்த காலமது .
படிப்பு முடிஞ்சு வேலைக்கு வெளயுருக்கு பொய்
வேள வேளைக்கு வெளியில் சோறு .
எத்தனைமணிக்கு படுத்தலும் எட்டரமனிக்கு மேல
எழுந்து பொங்கல் பூரின்னு போற வழில
சாப்பிட்டு சில நாள் அதுவும் இன்றி
அப்பிசுக்கு வெளிய மதியம் வகை வகைய
சாப்பாட்டு வறுத்த மீனு பொரிச்ச கோழி
எல்லாம் தின்னு நல்ல வஈர வாயுக்கு கடன் கொடுத்திட்டு
அவன் எத தின்னாலும் உதைக்கிறான்
வயித்து குள்ள இது வாலிப வயசு இப்ப ஏறயுதுட வயேறு
வலி தாங்காம ஐயோ அம்மான்னு அலறுன உள்ளே இருந்து
ஒரு குரல் அல்சர் னா சும்மாவா - அவர்தான் டாக்டர் ..

Sunday, July 10, 2011

உங்கள் தனிமையை பகிர்ந்து கொள்ள
உங்களுக்கே உரிமை இல்லாத பொது
நான் மட்டும் எப்படி வருவேன்
நண்பனாக ...
பொங்கி வரும் கடலலை கண்டேன் .
பொங்கத தமிழ் மனம் கண்டு ...
விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை ..
விட்டு கொடுத்தவர்கள் வெற்றி பெறுவது எப்போது ?

Wednesday, April 13, 2011

காரணம் .....

தளிர் இடையே குழந்தையாய் குந்தி இருந்த்தேன்
என் மேனி தொட்டு மொட்டுடைத்து குமரி ஆக்கினாய்
என் வாசம் பரப்பினாய் ..
என் வாசம் கண்டு காளையர்கள்
என் வசம் வந்து வட்டமிட்டனர்
என் தேன் குடித்து பறந்தோ டினர்
இதோ இன்னொருவன்
போதும் போதும் இந்த பிழைப்பு
தென்றலே நீ புயலாய் மாறு
என்னை புழுதியோடு சேர்த்துவிடு
கருணை செய்வாய் காற்றே..

மானுடத்தின் காதலன் ....

Tuesday, January 18, 2011

" வெற்றி "

தாய் கொடுத்தது " உயிர் " எழுத்து
தந்தை கொடுத்தது " முதல் " எழுத்து
ஆசிரியர் கொடுத்தது " வடிவ " எழுத்து
கடவுள் கொடுத்தது " தலை " எழுத்து
தமிழ் கொடுத்தது " ஆயுத " எழுத்து
நாமே கொடுத்தது " கை " எழுத்து
படிப்பு கொடுத்தது " பட்ட " எழுத்து
பதவி கொடுத்தது " பொறுப்பு " எழுத்து
ஆஅ என்பது " முதல் " எழுத்து
ழ என்பது "சிறப்பு " எழுத்து
என்றும் நம் வெற்றி காண்பது " மெய் "எழுத்து

விபத்து

வினாடி இன் விலை ....
விதி இன் விளைவு
விழிப்பின் அவசியம்
வேகத்தின் வெற்றி
விவேகத்தின் தோல்வி
விரும்பாத விளையாட்டு
வருத்தத்தின் வாசல்
வழக்கமான வழிப்போக்கன் ..........